செங்கோட்டையன் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன் இல்லத்திற்கு அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். 

ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் என்ற அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் கழகம் ஒன்றிணைய வேண்டும் என்ற கழக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் வலியுறுத்தி வருகிறார். அவரது கருத்தை வரவேற்கும் வகையில் 7வது நாளாக குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் இல்லத்திற்கு கழகத்தினர் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். பெரிய கொடிவேரி மற்றும் நம்பியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு அளித்தனர்.

Night
Day