மதுரை ஆதீனத்தின் கோரிக்கை நிராகரிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

உளுந்தூர்பேட்டை கார் விபத்து தொடர்பாக மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த மே 2 ஆம் தேதி சைவ சித்தாந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை ஆதீனம் காரில் சென்றபோது உளுந்தூர்பேட்டையில் வைத்து மற்றொரு கார் தன் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும், தன்னை சிலர் கொலை செய்ய முற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இதனை மறுத்த காவல்துறையினர், சி.சி.டி.வி., காட்சியை வெளியிட்டு தவறான தகவல்களை மதுரை ஆதீனம் தரப்பினர் வெளியிடுவதாக குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து மதுரை ஆதீனத்திற்கு எதிராக 4 பிரிவுகளில் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு சென்னை முதன்மை குற்றவியல் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கிய நிலையில், அவரிடம் விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசார் மதுரை வந்தனர். ஹெர்னியா அறுவை சிகிச்சை முடிவடைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஆதீன மடத்தில் படுத்த படுக்கையாக ஓய்வு எடுத்துவரும் மதுரை ஆதீனத்திடம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையொட்டி மடத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day