அறநிலையத்துறையின் அறிக்கை மீது அதிருப்தி - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உப கோயில்களின் சொத்துக்கள் தொடர்பான ஆவண பதிவேட்டை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கோவில் சொத்துக்கள் மீட்பது மற்றும் கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனை பார்த்த நீதிபதிகள் சொத்துக்களின் விவரம் குறித்த தெளிவான எந்த விவரங்களும் இல்லை என்றும் இணை ஆணையரின் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்தனர். எனவே மீனாட்சியம்மன் கோவில் மற்றும் அதன் உப கோவில்களின் சொத்துக்கள் தொடர்பான ஆவண பதிவேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Night
Day