எழுத்தின் அளவு: அ+ அ- அ
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவதை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வருகின்றன.
வடமாநிலங்களில் இன்று விநாயகர் சதுர்த்தியின் இறுதிநாளாகும். ஆனந்த சதுர்த்தியான இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடல் மற்றும் நீர்நிலைகளில் கரைக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் 7வது நாளில் ஆயிரக்கணக்கான கணபதி சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் எஞ்சிய சிலைகள் இன்று கரைக்கப்பட உள்ளன. கடற்கரைகளில் சிலைகளை கரைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஸ்ரீமந்த் பௌசாஹேப் ரங்காரி விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. மேளதாளம் முழங்க சங்கொலி ஒலிக்க விநயாகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
மும்பை கணேஷ்கல்லி கா ராஜா விநாயகர் சிலை கரைக்கும் விசர்ஜன ஊர்வலம் கோலாகலமாக துவங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மும்பையில் லால்பாச்சா ராஜ பந்தலில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கரைப்பதற்கான விசர்ஜன ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக துவங்கியது.
நாக்பூரில் சிலை கரைப்புக்கு முன்னர், விநாயகர் சிலைக்கு மங்கள ஆரத்தி செய்யப்பட்டது.
புனேவில் உள்ள ஸ்ரீ கஸ்பா கணபதி விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் விமரிசையாக மேளதாளங்கள் முழங்க துவங்கியது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத் 69 அடி விநாயகர் சிலையை கரைப்பதற்கான விசர்ஜன் ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.