எழுத்தின் அளவு: அ+ அ- அ
பணி நிரந்தரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசை கண்டித்து சென்னை பெரம்பூரில் குப்பை லாரிகளை சிறைபிடித்து தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து விளம்பர திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையில், தற்போது வரை கோரிக்கைககளை நிறைவேற்றவில்லை என தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனையடுத்து, பெரம்பூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை லாரிகளை சிறை பிடித்து 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விளம்பர திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். தூய்மை பணியாளர்கள் தர்ண போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.