இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து - ஆசிரியை பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மழலையர் பள்ளி ஆசிரியை தலைநசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரது 21 வயது மகள் மிர்த்தியங்கா. இவர் மூலப்பாளையம் பகுதியில் உள்ள  தனியார் மழலையர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் மிர்த்தியங்கா  இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு புறப்பட்டார். மூலப்பாளையம் அருகே வந்த போது, பின்பக்கமாக வந்த தனியார் பேருந்து மிர்த்தியங்காவின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த ஆசிரியை மீது பேருந்தின் பின்பக்கசக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மிர்த்தியங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day