குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த 22ம் தேதி திடீரென அறிவித்தார். இதனைத் தொடர்ந்து குடியரத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தும் பணியில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
தேர்தலில் வாக்களிக்க உள்ள உறுப்பினர்களின் பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பாக இறுதி செய்த தேர்தல் ஆணையம், தற்போது செப்டம்பர் 9ம் தேதி குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 7ம் தேதி தொடங்கும் வேட்பு மனுத் தாக்கல், 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில் செப்டம்பர் 9ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.