கல்லூரி மாணவன் கொலை வழக்கு - திமுக புள்ளிகள் தலையீடு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா நகர் இளைஞர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை காவல்துறை காப்பாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அண்ணா நகரை சேர்ந்த இளைஞர் நித்தின் சாய் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.கே. நகர் தனசேகரனின் பேரன் சந்துரு, அதியன், யாஷ்வந்த், ஆரோன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால், முக்கிய குற்றவாளியாக பிரணவ் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிரணவ்வை இந்த வழக்கிலிருந்து காவல்துறை விடுவிப்பதற்கு அவரது பாட்டி விஜயாதாயன்பன் திமுகவின் மகளிர் அணி தலைவியாக பொறுப்பு வகித்து வருவதே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Night
Day