பைக் டாக்சியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : ஒருவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

ஊபர் வாடகை இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்ற சென்னை வேப்பேரியைச் சேர்ந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

வேப்பேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தேனாம்பேட்டையில் வேலைக்கு செல்லும் நிலையில், நாள்தோறும் சம்பத் குமார் என்ற ஊபர் இருசக்கர வாகன ஒட்டி வேப்பேரியில் இருந்து தேனாம்பேட்டைக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்று விடுவது வழக்கம். இந்நிலையில், அவர், இளம்பெண்ணை பணிக்கு அழைத்துச் செல்லும்போது, ஜெமினி மேம்பாலம் அருகே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பத் குமாரை கைது செய்தனர். அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், பிழைப்பிற்காக கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் ஊபர் இருசக்கர வாகனம் ஓட்டி வருவதும் தெரியவந்துள்ளது.

Night
Day