எழுத்தின் அளவு: அ+ அ- அ
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 18 நாட்கள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய, இந்திய விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லாவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பக்கத்தில், இந்திய விமானப்படையின் போர் விமானியாக தனது பயணத்தை தொடங்கிய சுபான்ஷு சுக்லா, இன்று விண்வெளி வீரராக இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறியுள்ளார்.
இதன்மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து, ஆய்வுகளை மேற்கொண்ட முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற சாதனையை படைத்துள்ளதன் மூலம் இந்திய மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ளார் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்
சரித்திர நாயகன் சுபான்ஷு சுக்லா இந்த விண்வெளி பயணத்தின் மூலம் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை செய்துள்ளதாகவும் அதிலும் குறிப்பாக வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்க செய்யும் பரிசோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்று நாயகன் சுபான்ஷு சுக்லா மேற்கொண்ட இந்த விண்வெளி பயணம், நமது ககன்யான் திட்டத்திற்கு உதவக்கூடிய வகையில் ஒரு வெற்றிப்பயணமாக அமைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய வரலாற்றில் இடம்பெற்றுள்ள இந்த மகத்தான சாதனை, சுபான்ஷு சுக்லாவின் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார். அவர் மென்மேலும் பல்வேறு உலக சாதனைகளை படைத்து இந்திய மண்ணிற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.