வாழ்த்து தெரிவித்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி

எழுத்தின் அளவு: அ+ அ-

50 ஆண்டுகால திரையுலகப் பயணத்தையொட்டி தன்னை மனமார வாழ்த்திய அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரையுலக பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவும் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் நடிகர் ரஜினி காந்த்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த், தனக்கு வாழ்த்து தெரிவித்த கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்ததுடன், 79வது சுதந்திர தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 

இதேபோன்று தனக்கு வாழ்த்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனமார்ந்த நன்றியையும், சுதந்திர தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். மேலும் ரசிக பெருமக்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Night
Day