விளம்பர திமுக அரசின் துணை முதலமைச்சர் உதயநிதியின் கட் அவுட் விழுந்து விபத்து ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
மத்திய அரசின் தொகுதி மறு சீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கையை எதிர்த்து திருவள்ளூரில் திமுக கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதற்காக வைக்கப்பட்ட உதயநிதி படம் அச்சிடப்பட்ட கட் அவுட் சரிந்து சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணிகள் காயமடைந்தனர். இதேபோன்று கடந்த 2019 ஆம் ஆண்டும் ராட்சத பேனர் மற்றும் கட. அவுட்டுகள் சாலையில் சரிந்து விழுந்து சுபஸ்ரீ என்ற ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் கோவை உத்தமபாளையம் உள்ளிட்ட இடங்களிலும் கடந்த காலங்களில் இதேப் போன்று விபத்துகள் நிகழ்ந்தன.
இந்த விபத்துகளை ஆதாரமாகக் கொண்டு சாலையில் சட்டவிரோதமாக பேனர், கொடிக்கம்பங்கள், கட்அவுட் வைத்த நபர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து தகுந்த சட்ட மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு புகார் அனுப்பியிருந்தார். இந்த புகாரை பரிசீலித்த தேசிய மனித உரிமை ஆணையம் புகாரை வழக்காக பதிவு செய்து விசாரணைக்கு ஏற்றுள்ளது.