IPL தொடரின் இன்றைய போட்டியில் MI - PBKS அணிகள் பலப்பரீட்சை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் தொடரில் மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இரு அணிகளும் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விட்டாலும், புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை பிடிப்பதற்கு இந்த ஆட்டத்தின் முடிவு அவசியமாகும். தற்போது 16 புள்ளிகளுடன் உள்ள மும்பை அணி இன்று வெற்றி பெற்றால் 18 புள்ளிகளை பெறும். குஜராத்தை விட ரன்ரேட் வலுவாக இருப்பதால் மும்பைக்கு டாப்-2 இடம் உறுதியாகி விடும். ஆனால் தோற்றால் 4-வது இடத்திலேயே நீடிக்கும். 17 புள்ளிகள் கொண்ட பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்தினால் அந்த அணியின் புள்ளிகள் 19 ஆக உயரும். அப்போது அந்த அணிக்கு டாப்-2 இடங்கள் உறுதியாகும். கடைசி லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, லக்னோவை தோற்கடித்தாலும் பிரச்சினை இருக்காது. மாறாக பஞ்சாப் தோற்றால் 3 அல்லது 4வது இடத்தில் இருக்கும். இதனால் இன்றைய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day