உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் - 22 பதக்கங்களை வென்ற இந்தியா - பிரதமர் மோடி பாராட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 22 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், உலக பாரா-தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், நமது வீரர்களின் செயல்திறன் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருந்ததாக பாராட்டி உள்ளார். 6 தங்கப் பதக்கங்கள் உட்பட 22 பதக்கங்களை வென்று நாட்டை பெருமைப்படுத்திய நமது வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, நமது வீரர்களின் வெற்றி மேலும் பலருக்கு ஊக்கமளிக்கும் என தெரிவித்துள்ளார்.

Night
Day