சோலார் பேனல்கள் அமைக்க எதிர்ப்பு - தீக்குளிக்க முயன்ற மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரகம் முன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லத்திகுளம் கிராமத்தில் தனியார் நிறுவனத்தால் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கல்லத்திகுளம் பகுதியில்  வனவிலங்குகள் அதிகம் வாழும் சூழலில், அந்த பகுதியில் உள்ள சுமார் லட்சக்கணக்கான மரங்களை அழித்து தற்போது அந்த தனியார் நிறுவனமானது சோலார் பேனர்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வன விலங்குகள் , இயற்கை சூழல் பாதிக்கப்படுவதோடு பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக கூறி தொடர் போராட்டங்களில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆட்சியரகத்திற்கு பள்ளி குழந்தைகள், கிராம மக்கள் என அனைவரும் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினருக்கும், போராட்ட காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆட்சியரை சந்தித்து கிராம மக்கள் மனு அளித்தனர்.

Night
Day