தமிழ்நாட்டிற்கு 4 நாட்கள் 'மஞ்சள்' அலர்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Night
Day