புரட்சித்தலைவர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும் - புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அவனியாபுரத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலையை சேதப்படுத்தப்பட்டிருப்பதற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், மதுரை அவனியாபுரம்- திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகின்ற வாடிவாசல் அருகே அமைந்துள்ள பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலை சேதமடைந்து கீழே விழுந்துள்ளதாக வரும் செய்திகள் மிகவும் வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். மறைந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மன்றத்தினரால் கடந்த 1990ம் ஆண்டு நிறுவப்பட்ட புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கு நாள்தோறும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து வந்த நிலையில், தற்போது இந்த சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என சின்னம்மா தெரிவித்துள்ளார். இந்த இழிசெயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்- பகைவருக்கு கூட பாசத்தை காட்டும் தங்கள் புரட்சித் தலைவரின் திருவுருவ சிலையை சேதப்படுத்த எப்படி மனம் வந்தது? என்று தெரியவில்லை- திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, தமிழக மக்களை தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து மறைந்த நம் தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற அவலநிலை மிகவும் வேதனை அளிப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இதுபோன்று செயல்கள் நடைபெறாத வகையில் தமிழக காவல்துறை மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழக காவல்துறை எவ்வாறு சுதந்திரமாக தங்கள் கடமையை ஆற்றியதோ, அதேபோன்று தற்பொழுதும் செயல்பட்டு, குற்றச்செயல்கள் நடைபெறாமல் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என சின்னம்மா தெரிவித்துள்ளார். 

இன்றைக்கும் தெய்வங்களாக நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நமது தலைவர்களின் திருவுருவச் சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு அளிக்கின்ற நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா கேட்டு கொண்டுள்ளார். மேலும், இதுபோன்று நமது தலைவர்களின் திருவுருவச் சிலைகளை அவமதிப்பவர்கள், சேதப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். 

சேதமடைந்த புரட்சித்தலைவரின் திருவுருவ சிலையை சரிசெய்து மீண்டும் அதே இடத்தில் வைத்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day