இஸ்ரேல்- ஹமாஸ் இடையே எகிப்தில் இன்று பேச்சுவார்த்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே எகிப்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிது. 

காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக 20 அம்ச திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இதில் சில அம்சங்களை ஏற்றுக் கொண்ட ஹமாஸ், பணயக் கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டது. இதையடுத்து காசா மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு, அதிபர் டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், தங்களால் கைது செய்யப்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் காசா மக்களை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது. இந்நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே எகிப்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. காசாவில் போர் தொடங்கி 2 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த பேச்சுவார்த்தை மிகுந்த முக்கியம் பெற்றுள்ளது.

Night
Day