குஜராத் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2 நாட்கள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, வதோதராவில் நடைபெற்ற பிரம்மாண்ட சாலை அணிவகுப்பில் பங்கேற்றார். தேசிய கொடி ஏந்தியபடியும், மலர்களை தூவியும் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

77 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத் சென்றார். தமது பயணத்தின் முதற்கட்டமாக வதோதரா சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட சாலை அணிவகுப்பில் பங்கேற்றார். சாலையின் இருபுறங்களிலும், வீடுகளின் மாடியிலும் திரண்டிருந்த ஏராளமான மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். தேசிய கொடிகளை ஏந்தியபடியும், மலர்தூவியும், வாழ்த்து முழக்கமிட்டும் பிரதமர் மோடிக்கு மக்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர். காரில் நின்றபடி பயணித்த பிரதமர் மோடி, மக்களின் உற்சாக வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

Night
Day