மாநில அளவிலான கைப்பந்து போட்டி - இந்தியன் ஓவர்சீஸ் அணி சாம்பியன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நெல்லை நண்பர்கள் கைப்பந்து சங்கம் நடத்திய இந்த போட்டியில் ஆண்களுக்கான இறுதி போட்டியில், ஜிஎஸ்டி அணியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற  ஆட்டத்தில் 3-2 என்ற செட் கணக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டதை கைப்பற்றியது. இதனையடுத்து அந்த அணிக்கு கோப்பையுடன் 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும், இரண்டாம் இடம் பிடித்த ஜிஎஸ்டி அணிக்கு கோப்பையுடன் 40 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.

varient
Night
Day