போல்வால்ட் போட்டி : விவசாயக் குடும்பத்தை சேர்ந்த பெண் வீராங்கனை பரணிகா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெடரேஷன் கோப்பை தடகளத்தின் போல்வால்ட் போட்டியில் மயிலாடுதுறையில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெண் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில், கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான போல் வால்ட் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த விவசாயி இளங்கோவன் என்பவர் மகள் பரணிகா 4 மீட்டர் உயரம் தாண்டி, இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் பரணிகா பங்கேற்ற வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Night
Day