போலி இணையதளம் மூலம் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அதிகாரப்பூர்வ இணையதளத்தை போலவே போலியான இணைய தளத்தை உருவாக்கி ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டன. இந்தநிலையில், அதிகாரப்பூர்வ இணையதளத்தை போலவே போலியான இணைய தளத்தை உருவாக்கி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பலர் பணம் கட்டி டிக்கெட் முன்பதிவு செய்து ஏமாந்ததது தெரியவந்துள்ளது. 

Night
Day