பெங்களூரு துயரம் - கர்நாடக முதல்வரின் அரசியல் செயலாளர் சஸ்பெண்ட்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் முதலமைச்சர் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கோவிந்தராஜ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மாநில ஒலிம்பிக் சங்க தலைவராகவும் இருக்கும் கோவிந்தராஜ், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் சித்தராமையாவிற்கு அதிக அழுத்தம் கொடுத்தவர் என்று கூறப்படுகிறது. இதனிடையே உளவுத்துறை ஏடிஜிபி ஹேமந்த் நிம்பல்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கான புதிய பணியிடம் அறிவிக்கப்படவில்லை. கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் ஏற்கனவே பெங்களூரு காவல் ஆணையர் மற்றும் சில முக்கிய காவல் அதிகாரிகள் ஏற்கனவே பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day