பெங்களூரு கூட்டநெரிசலில் சிக்கி தமிழக பெண் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

பெங்களூருவில் ஆர்.சி.பி அணி வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் கோப்பையை ஆர்.சி.பி அணி முதன்முறையாக கைப்பற்றியதை பாராட்டும் விதமாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க சின்னசாமி மைதானத்திற்குள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த காமாட்சி என்பவரும் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரிவந்துள்ளது.

இவர் பெங்களூருவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், ஆர்.சி.பி அணியின் வெற்றிக்கொண்டாட்டத்தில் பங்கேற்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த காமாட்சியின் உடல் இன்று பிற்பகல் உடுமலை கொண்டு வரப்பட உள்ளது. இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day