பக்தவச்சலம் மகளிர் கல்லூரி 30-வது ஆண்டு விளையாட்டு தினவிழா

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கொரட்டூர் பக்தவச்சலம் மகளிர் கல்லூரியில் மாணவிகளின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் 30 ஆம் ஆண்டு விளையாட்டு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சென்னை கொரட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் பக்தவச்சலம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ் ஆர் எம் கல்லூரி விளையாட்டுத்துறை இயக்குனர் ஜீசஸ் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினருடன் கல்லூரி துணை முதல்வர் மரகதமணி மற்றும் பள்ளி முதல்வர்கள் விருதுகளை வழங்கினர்.

தொடர்ந்து இதே கல்லூரி வளாகத்துக்குள் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளியில் படிக்கும் ஏராளமான சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் நடனமாடி காண்பவரை மெய்சிலிர்க்க வைத்தனர்.

Night
Day