தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் 4 அணிகள் வெற்றிப் பெற்றது.

லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 14-வது அகில இந்திய ஹாக்கி போட்டி கோவில்பட்டியில் 10 நாட்கள் நடைபெறுகிறது. போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 36 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. முதல் லீக் போட்டியில் சென்னை இன்கம்டாக்ஸ் அணியை வீழ்த்தி நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், 2வது ஆட்டத்தில் சென்னை தமிழ்நாடு லெவன் அணியுடன் மோதிய புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் வெற்றி பெற்றது. 3வது ஆட்டத்தில் கர்நாடகா பெல்லாரி அணியுடன் மோதிய மும்பை யூனியன் வங்கி அணியும், 4வது ஆட்டத்தில் சென்னை அக்கவுண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்ரியேஷன் கிளப் அணியுடன் மோதிய ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி எக்ஸலன்ஸ் அணியும் வெற்றி பெற்றது.

Night
Day