திருச்சியில் மாநில அளவிலான ஆடவர் சீனியர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சியில் மாநில அளவிலான ஆடவர் சீனியர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி இன்று தொடங்கியது. ஆர்.ஜே.ஜே.எஸ் பூப்பந்தாட்ட கழகம் மற்றும் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் இணைந்து 5ம் ஆண்டு மாநில அளவிலான 45 வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்கும் சீனியர் ஆடவர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் தொடங்கியது. இன்றும், நாளையும் நடைபெறும் இப்போட்டியில் திருச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 21 பூப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டுள்ளன. கால் இறுதி போட்டிகள் நாக்அவுட் முறையிலும் அதனைத் தொடர்ந்து அரையிறுதி போட்டிகள் லீக் முறையில் நடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. 

Night
Day