பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ்டர் இந்தியா மணிகண்டன் திடீரென உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுநகர் பகுதியில் பிரபல உடற்பயிற்சி நிலையத்தை பாடி பில்டர் மணிகண்டன் நடத்தி வந்தார். இந்நிலையில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக மீஞ்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இச்சம்பவம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Night
Day