நடிகை சரோஜா தேவி மறைவு - பிரபலங்கள் இரங்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவியின் மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கன்னட முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை சரோஜாதேவியின் மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு என தெரிவித்தார். சரோஜாதேவியின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டுள்ளார். 

கன்னட துணை முதலமைச்சர் சிவக்குமார் வெளியிட்டுள் ளஇரங்கல் செய்தியில், நடிப்பு சரஸ்வதி என என்றென்றும் பெயர் பெற்ற நடிகை சரோஜா தேவியின் மறைவு பெரும் வலியை தந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினியின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை எனவும், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட, சரோஜா தேவி காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக பதிவிட்டுள்ளார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்து புகழ்பெற்ற சரோஜா தேவியின் புகழ், திரைப்பட ரசிகர்கள் நினைவில் என்றும் வாழும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரையுலகின் பொற்காலம் முடிவுக்கு வந்ததாகவும், சரோஜா தேவியை போன்று வேறு எந்த நடிகையும் பெயரையும் புகழையும் அனுபவித்ததில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.

Night
Day