எழுத்தின் அளவு: அ+ அ- அ
விளம்பர திமுக அரசை கண்டித்து ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண் ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்களை காவல்துறையினர் ஒருமையில் அவதூறாக பேசியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு விளம்பர திமுக அரசை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் 7வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சாலையில் தர, தரவென இழுத்தும், அநாகரீகமாக ஆசிரியர்கள் மீது கைகளை வைத்தும் காவல்துறையினர் கைது செய்தனர். பெண் ஆசிரியர்களை இழுத்து தள்ளிய ஆண் காவலர்களை தட்டி கேட்ட செய்தியாளர்களை காவலர்கள் தகாத வார்த்தையால் திட்டி ஒருமையில் பேசி அநாகரீக செயலில் ஈடுபட்டனர். இதனால், போராட்ட களத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
தொடர்ந்து போராட்ட களத்தில் செய்தி சேகரிக்க நின்ற ஜெயா ப்ளஸ் பெண் செய்தியாளரை காவலர்கள் பெண் என்று கூட பார்க்காமல் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.