எழுத்தின் அளவு: அ+ அ- அ
பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிப்பதாக திரைப்பிரலபங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகை சரோஜா தேவியின் மறைவு குறித்து ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் தொலைபேசி மூலம் திரைப்பிரபலங்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மிகவும் அழகாக பேசக்கூடியவர் நடிகை சரோஜா தேவி எனவும், அவரின் மறைவு மிகவும் வருத்தமும், வேதனையும் அளிப்பதாகவும் பழம்பெரும் நடிகை சி.ஆர். சரஸ்வதி தெரிவித்தார்.
நடிகை சரோஜா தேவியின் மறைவு குறித்து வேதனை தெரிவித்த நடிகை கஸ்தூரி, சரோஜா தேவியின் தீவிர ரசிகையான தன்னால், அவரின் மறைவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், அவரின் மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு எனவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தொடர்ந்து பேசிய இயக்குநரும், நடிருகமான கே.பாக்கியராஜ், நடிகை சரோஜா தேவியின் தமிழ் பேச்சு மிகவும் அழகாக இருக்கும் எனவும், அவரை இழந்துவாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் தெரிவித்தார்.
நடிகை சரோஜா தேவி பெரும் தங்கம் எனவும், நல்ல நடிகை மட்டுமின்றி, அவர்கள் நல்ல பாடகி எனவும், அவர்களின் மறைவு வருத்தமளிப்பதாகவும் இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் தெரிவித்தார்.
நடிகை சரோஜா தேவி மறைவு குறித்து பேசிய நடிகை சுகாசினி, காலத்தால் அழியாத அமரர் ஜீவி சரோஜா தேவி எனவும், அவர்கள் இல்லை என நினைக்கும்போது மனது வலிப்பதாகவும் குறிப்பிட்டார்.
நடிகை சரோஜா தேவியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றும், அவர்களுக்கான தனி நடிப்பு மக்களின் நெஞ்சில் என்றும் இருக்கும் என பழம்பெரும் நடிகை லதா வேதனையுடன் கூறினார்.
மறைந்த நடிகை சரோஜா தேவியின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட நடிகை ராதிகா, தாய் உள்ளம் படைத்தவர் நடிகை சரோஜா தேவி எனவும், அவரின் மறைவு நினைத்து கூட பார்க்க முடியாத இழப்பு எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மறைந்த நடிகை சரோஜாதேவியை திரையுலகம் மறக்காது எனவும், கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர் சரோஜா தேவி எனவும் வேதனையுடன் தெரிவித்தார்.
மறைந்த நடிகை சரோஜா தேவி குறித்து பேசிய இயக்குநர் விக்ரமன், நல்ல நடனம் ஆடியதாலேயே சரோஜா தேவி அபினய சரஸ்வதி என அழைக்கப்பட்டதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் எனவும் கூறினார்.
நடிகை சரோஜா தேவி மறைவு குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்த நடிகர் ரமேஷ் கண்ணா, கலைஞர்கள் அனைவரையும் மதிக்கக்கூடியவர் சரோஜா தேவி எனவும், அற்புதமான நடிகையின் மறைவு வருத்தமளிப்பதாகவும் கூறினார்.
நடிகை சரோஜா தேவியின் ஆத்மா சாந்தி அடையட்டும் என இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இரங்கல் தெரிவித்துள்ளார். அனைவரின் மனதிலும் சரோஜா தேவி நிலைத்திருப்பதாகவும் பார்த்திபன் வேதனையுடன் கூறினார்.