தமிழ்நாடு ஹாக்கி வீரர்களுக்கான பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

 தமிழ்நாடு ஹாக்கி வீரர்களுக்கான பயிற்சி முகாம் சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு ஹாக்கி வீரர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் விதமாக எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் இன்று தொடங்கி வரும் 28ம் தேதி வரை பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் ஏராளமான ஹாக்கி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய அணியின் வீரர் ருபிந்தர் பால் சிங், கோல் கீப்பர் ஆட்ரின் ஆகியோரின் மேற்பார்வையில் இப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு ஹாக்கி அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.

Night
Day