ஒரு நிமிடத்தில் 10 வித யோகாசனங்களை செய்த 12 வயது மாணவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது மாணவியான ருத்வி, ஒரு நிமிடத்தில் 10 வித யோகாசனங்களை செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 

இவர் கடினமான யோகாசனங்களையும் மிக எளிதில் செய்து அசத்தி வருகிறார். அத்துடன் கைகளால் கால்களை பிடித்தபடி மிக வேகமாக குட்டிக்‍கரணம் அடித்து காண்போரை வியக்‍க வைத்தார். நாள்தோறும் யோகாசனங்களை செய்வதால் உடல் மட்டுமின்றி மனமும் ஓய்வாக இருப்பதாகவும் தன்னால் பள்ளி பாடங்களை அதிக கவனத்துடன் படிக்‍க முடிவதாக தெரிவித்தார். தாம் சர்வதேச யோகா சாம்பியன் பட்டம் பெற விரும்புவதாகவும் மாணவி ருத்வி தெரிவித்தார்.

varient
Night
Day