ஐபிஎல் போட்டி - கல்கி திரைப்படத்தின் அப்டேட் வெளியிடும் படக்குழு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இன்று இரவு நடைபெறும் ஐபிஎல் போட்டியின்போது பிரபாஸ் நடிக்கும் கல்கி திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள கல்கி திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதி, கிராஃபிக்ஸ் காட்சிகளின் தாமதத்தால் தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று இரவு நடைபெறும் பஞ்சாப் - குஜராத் இடையேயான போட்டியின்போது ஸடார் போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கல்கி திரைப்படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Night
Day