ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு அளித்த ரசிகர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நடிகர் விஜயின் கில்லி திரைப்படம் முதல் நாளில் மட்டும் 10 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்த நிலையில், முதல் நாள் வசூலாக 10 கோடி ரூபாய் வரை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day