நடிகர் சோனு சூட், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு ED சம்மன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக நடிகர் சோனு சூட் மற்றும்  கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

சட்டவிரோத சூதாட்ட செயலி மூலம் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த குற்றச்சாட்டில் தொடர்புடையதாக நடிகர்கள் சோனு சூட், ஊர்வசி ரௌட்டாலா முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், யுவ்ராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் யுவராஜ் சிங் மற்றும் நடிகர் சோனு சூட் இருவரும் வரும் 24 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ராபின் உத்தப்பா 22-ஆம் தேதி ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day