டெல்லி அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று இரவு நடந்த ஐபிஎல் 47வது லீக்‍ ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்களே எடுத்தனர்.   டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன் குவித்தது. குல்தீப் 34 ரன்களுடன், வில்லியம்ஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சால்ட் அதிகபட்சமாக 68 ரன், ஸ்ரையாஸ் ஐயர் 33 ரன் எடுத்தனர். டெல்லி பந்துவீச்சில் அக்சார் பட்டேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Night
Day