சென்னை திரும்பிய செஸ் வீரர் குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் குகேஷ்க்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்த குகேஷுக்கு, செஸ் சம்மேளம், அவரது பள்ளி சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குகேஷ், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என கூறினார். 

Night
Day