சென்னை அணிக்காக சதம் அடித்த முதல் கேப்டன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்தார். நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி சதமடித்த கெய்க்வாட் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் சென்னை அணிக்காக சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு 2019ம் ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அப்போதைய கேப்டன் தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

Night
Day