கேலோ இந்தியா இளையோர் ஆடவர் வாலிபால் போட்டி : தங்கம் வென்ற தமிழ்நாடு அணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளில், ஆடவர் வாலிபால் போட்டியில் தங்கம் வென்று தமிழ்நாடு அணியினர் சாதனை படைத்துள்ளனர்.   6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைப்பெற்ற ஆடவர் வாலிபால் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி, ஹரியானா அணியை எதிர்கொண்டது. இதில் 3-1 என்ற செட் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி தங்க பதக்கத்தை கைப்பற்றியது. ஹரியானா அணி வெள்ளி பதக்கத்தையும், ஆந்திர பிரதேச அணி வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றியது. 

Night
Day