ஐபிஎல்: சென்னை - குஜராத் அணிகள் இன்று மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

17வது சீசன் ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை அணி, குஜராத் அணியை எதிர்கொள்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில், ருத்துராஜ் தலைமையிலான சென்னை அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில், குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி கோப்பையை வென்றது. இந்த தோல்விக்கு இன்றைய போட்டியில் குஜராத் அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், முதல் ஆட்டத்தில் பெங்களூரை தோற்கடித்த சென்னை அணி, வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டம்  ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

varient
Night
Day