விளையாட்டு
மகளிர் உலகக்கோப்பை : மெகா பரிசுத்தொகை அறிவிப்பு
சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் - 2 வார...
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது விராட் கோலியை, கௌதம் கம்பீர் கட்டியணைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் 10வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. கடந்தாண்டு, லக்னோ - பெங்களூரு இடையே நடைபெற்ற போட்டியின் போது விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, இருவரும் எலியும் பூனையுமாக இருந்து வந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் பிரச்னை நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மைதானத்தில் இருவரும் கட்டி அரவணைத்து மகிழ்ச்சியாக உரையாடினர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள சாலையில் மீண்டும் ராட்சத பள்ளம் - 2 வார...
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...