ஐபிஎல் தொடரின் 43வது ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் தொடரின் 43வது ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரேசர் மற்றும் போரல் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர். பிரேசர் 27 பந்துகளில் 84 ரன்களும், போரல் 36 ரன்களும் எடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் சொர்ப ரன்னில் வெளியேற, திலக் வர்மா 63 ரன்கள் அடித்து அணிக்கு சற்று ஆறுதல் தந்தார். இதையடுத்து 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்களில் மும்பை அணி ஆட்டமிழந்தது. இதன் மூலம் 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.

Night
Day