பெண்களின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்த போலீஸ்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெரினா கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியும், தங்களிடம் அத்துமீறியதாகவும் போலீசார் மீது பெண் தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 
துப்புரவு பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இது தொடர்பாக விளம்பர திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க முயன்ற தூய்மை பணியாளர்களை தலைமை செயலகம் வாயிலிலேயே வைத்து போலீசார் கைது செய்தனர். வாக்குறுதியையும், கோரிக்கைகளையும் கண்டுக்கொள்ளாமல் உள்ள விளம்பர திமுக அரசை கண்டித்து சென்னை மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 மாதங்களாக வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாகவும், சென்னை மாநகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும் அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

பணி வழங்காவிட்டால் கடலில் குதித்து தற்கொலை செய்துக்கொள்வோம் என விளம்பர திமுக அரசை எச்சரித்த தூய்மை பணியாளர்கள், பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்து திமுக அரசு தங்களை ஏமாற்றி விட்டதாக வேதனை தெரிவித்தனர்.

4 மாதங்களாக போராட்டம் நடத்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என குமுறிய தூய்மை பணியாளர்கள், தங்களின் குழந்தைகளின் கல்வி செலவுக்கு கூட பணமின்றி தவிப்பதாக வேதனை தெரிவித்தனர். தாங்கள் தற்கொலை செய்தால் தான் அரசு கண்டுகொள்ளுமா எனவும் முதல்வர் ஸ்டாலினுக்கு தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசியும், அத்துமீறியும் நடந்து கொண்டதாக பெண் தூய்மை பணியாளர்களை குற்றம்சாட்டினர்.

இதனிடையே தூய்மை பணியாளர்கள் மீது அறிவிக்கப்படாத அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக உழைப்போர் உரிமை இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது. மேலும், தூய்மை பணியாளர்களை விளம்பர திமுக அரசே கடலில் தள்ளியிருப்பதாக உழைப்போர் உரிமை இயக்கத்தை சேர்ந்த பாரதி விமர்சித்துள்ளனர்.

தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதன் மூலம் தொழிலாளர்களின் ஊதியம் சுரண்டப்படுவது தான் சமூக நீதியா என சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தான் சமூக நீதி எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

Night
Day