ஐபிஎல் கிரிக்‍கெட் : சூர்யகுமார் சதத்தால் 7 விக்‍கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம் அடித்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை அணி.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - இஷான் கிஷன் களமிறங்கினர். இஷான் கிஷன் 9 ரன்னிலும் ரோகித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 31 ரன்களுக்‍குள் 3 விக்‍கெட்களை இழந்த மும்பை அணியில், சூர்யகுமார் யாதவ் 102 ரன்னிலும் திலக் வர்மா 37 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 17.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 174 எடுத்து வெற்றி பெற்றது.

Night
Day