இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் முதல் டெஸ்ட் - வீரர்கள் தீவிர பயிற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், விராட் கோலிக்கு பதிலாக ரஜத் பட்டிதர் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில், முதல் இரு போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய முன்னணி வீரர் விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக வலது கை பேட்ஸ்மேனான ரஜத் பட்டிதர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

varient
Night
Day