ரூ.100 புற்றுநோய் சிகிச்சை மாத்திரை : டாடா நினைவு மையம் கண்டுபிடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நூறு ரூபாய் விலை கொண்ட தங்களது மாத்திரை புற்றுநோய் தாக்குவதை தடுப்பதில் நல்ல பலனை தருவதாக டாட்டா நினைவு மையம் அறிவித்துள்ளது.  தங்களது 100 ரூபாய் மாத்திரை இரண்டாவது முறையாக நோயில் இருந்து குணமானவரை புற்றுநோய் தாக்குவதில் இருந்து காப்பதாக மும்பை, டாட்டா நிறுவன புற்றுநோய் ஆய்வு மற்றும் சிகிச்சை மையம் கூறியுள்ளது. 10ஆண்டுகளாக இது குறித்து தங்களது விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுவந்ததாக கூறியுள்ள டாட்டா நினைவு மையம், 2வது முறையாக புற்றுநோய் தாக்குவதை தடுப்பதுடன், கீமோதெரஃபி மற்றும் கதிரியக்க சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவை 50 சதவீதம் தடுப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதற்காக மனித உடலில் இருந்த புற்றுநோய் திசுக்கள் எலியின் உடலில் செலுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டதில், மிகச்சிறந்த தீர்வு கிடைத்ததாக டாட்டா நினைவு மையத்தின் மூத்த புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவரான ராஜேந்திர பட்வே கூறியுள்ளார்.

varient
Night
Day