தலைவலிக்கு ஹார்ட்டில் சர்ஜரி - பலியான சோகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கொளத்தூர் பிரசாந்த் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தமிழ்நாடு ஓவிய சங்க தலைவர் உயிரிழந்தாக குற்றம்சாட்டி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாதவரம் பொன்னியம்மன்மேடு தேவகி நகரை சேர்ந்த சினிசேகர் என்பவர் தமிழ்நாடு ஓவிய சங்க தலைவராக இருந்து வந்தார். கடந்த 6 தேதி அன்று தலைவலிக்கு சிகிச்சைக்காக கொளத்தூர் பிரசாந்த் மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிகிறது. பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், உடலை வாங்க மறுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து அவர்கள் 200 அடி சாலையில் குவிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடம் உடற்கூறு ஆய்வு செய்தால் தான் உடலை பெற்றுக் கொள்வோம் என்றும், மருத்துவமனை நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனம் ஓட்டிகள் அவதி அடைந்தனர். 


Night
Day