புதிய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ICICI

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதிய வங்கி கணக்கு தொடங்குபவர்களுக்கு மினிமம் பேலன்ஸை பன்மடங்கு உயர்த்தி ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, நகர்புறங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயாகவும், சிறு நகரங்களுக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும், கிராமப்புற பகுதிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயாகவும் மினிமம் பேலன்ஸாக ஐசிஐசிஐ வங்கி நிர்ணயித்துள்ளது. மேலும், ஏடிஎம்களில் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் எனவும், அதற்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் பழைய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day