பேச்சுவார்த்தை தோல்வி - தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோரிக்கைகளை தொடர்பான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால், தூய்மை பணியாளர்கள் 11வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர். 

பணி நிரந்தரம் தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசை கண்டித்து, தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிடக்கோரியும், சென்னை பெருநகர மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலத்தில் பணியாற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக விளம்பர திமுக அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது. இதையடுத்து தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக திட்டவட்டமாக தெரிவித்துள்ள தூய்மை பணியாளர்கள், இன்று 11-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

Night
Day